செங்கல்பட்டு : செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் கடந்த (07.01.2023) அன்று11.00 மணியளவில், செங்கல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர், திரு பார்த்திபன் அவர்கள் தலைமையில் காவலர்கள் சகிதம், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்த ரஞ்சித் (எ) மண்ட ரஞ்சித் (21) , மாத்தூர் கிராமம், வடமாத்தூர் அஞ்சல், சிவகங்கை மாவட்டம் மற்றும் அபினேஷ்வரன் (எ) அபினேஷ் (22), லடாநத்தம் கிராமம், திருப்புவனம் தாலுக்கா, சிவகங்கை மாவட்டம் ஆகிய இரண்டு நபர்களை FRS App (Face Recognition System App) மூலம் சோதனை செய்ததில், மேற்படி குற்றவாளிகள் ரஞ்சித் மீது கொலை வழக்கு, திருட்டு மற்றும் அடிதடி வழக்கு உட்பட 6 வழக்குகளும், அபினேஷ்வரன் மீது 2 குற்ற வழக்குகளும் இருப்பதாக தெரியவந்ததின் அடிப்படையில் குற்றவாளிகளை விசாரணை செய்து, அவர்கள் தங்கியுள்ள இடமான திம்மாவரம் படவேட்டம்மன் நகரில் இருக்கும் வீட்டை சோதனை செய்ததில், 25 பொட்டலங்களில் சுமார் 1.25 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலைய குற்ற எண் : 15/2023 u/s 8(c), 20(b), (ii), (B) NDPS ACT -ன் படி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.
மேலும், வாகன சோதனையில் துரிதமாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர், திரு.பார்த்திபன், மு.நி.கா.355, திரு.கண்ணன், காவலர்கள் திரு.நாகராஜ், திரு.சுதர்சன், திரு.அருண்குமார் மற்றும் திரு.விஜயகுமார் ஆகியவர்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்.A.பிரதீப், இ.கா.ப அவர்கள் வெகுவாக பாராட்டினார். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சந்தேகப்படும்படியான நபர்களை காவல்துறையினரால் FRS App மூலம் சோதனை செய்வது தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும்/தெரியவரும் குற்ற சம்பவங்களை 7200102104 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்தால், குற்றம் செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்