குமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பிற்காகவும்,குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று Swiggy மற்றும் zomato மற்றும் மற்ற உணவு வழங்கும் நிறுவன ஊழியர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்து உரையாடினார். அதில் உணவு கொண்டும் வரும் ஊழியர்கள் பணிக்கு சேரும் போது அவர்களின் குற்ற பின்னணி விசாரிக்கபடவேண்டும். காவல்துறையில் அவர்கள் மேல் எந்த வழக்கும் இல்லை என்பதற்கான NOC பெற்று பணியில் அமர்த்தவேண்டும். மேலும் உணவு கொண்டு செல்லும் போது எதாவது சட்டத்துக்கு விரோதமான குற்ற சம்பவங்களை கண்டால் உடனடியாக மாவட்ட காவல்துறையின் அவசர அழைப்பான 100 எண்ணுக்கோ, 7010363173 எண்ணுக்கோ அல்லது மாவட்ட காவல்துறை சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் இரவு ரோந்து அலுவலர்களின் எண்ணுக்கு தகவல் அளிக்கலாம். மேலும் வாகனத்தில் செல்லும் போது உணவை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சாலையில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் செல்ல வேண்டும் எனவும், சாலையில் மெதுவாக வாகனத்தை இயக்க வேண்டும் என்று அறிவறுத்தினார். பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்து மாவட்ட காவல்துறைக்கு நன்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.