சிவகங்கை: (18.05.2024) சிவகங்கை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் குற்றவாளிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.நமச்சிவாயம், தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கலைக்கதிரவன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரான்சிஸ், அனைத்து உட்கோட்டம் மற்றும் இதரப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து ஆயுதப்படை வாகனப்பிரிவு வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டார்.