தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து (31.08.2024) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்கள் அளிக்கும் புகார் மனுக்களை பெற்று கொண்டு ஒப்புகை ரசீது அளித்து அவர்களின் முழு விவரத்தையும் காவல் நிலைய மென்பொருளில் (Software) பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனவும், அதனை மாவட்ட காவல் அலுவலகத்தில் கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.