திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வி.கே.புரம் பகுதியில் 309 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் கொண்டு வந்த தென்காசி மாவட்டம், இரவணசமுத்திரம் பகுதியை சேர்ந்த முகமது மைதீன் என்பவரின் மகன் முகமது ஹலித் (32), முகமதுகனி என்பவரின் மகன் அஜ்மீர் அலி (36), தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி, பள்ளிவாசல் வடக்கு தெருவை சேர்ந்த செய்யது மசூது என்பவரின் மகன் முகமது தௌபிக் (21) ஆகியோரை வி.கே.புரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்படி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் கைதான நபர்களை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வி.கே.புரம் காவல் ஆய்வாளர் திரு. பெருமாள் அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன், இ.கா.ப., அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், (18.10.2022),குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.