திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் (29.08.2024) மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 69 சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்று விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதற்காக மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வாறு சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வது சட்டப்படி குற்றம் என்பதால் அவ்வாறு ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்கள் மீதும் மற்றும் உரிமையாளர்கள் மீதும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.