திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்,இ.கா.ப., தலைமையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் (CWC), மாவட்ட குற்ற ஆவண காப்பக (DCRB) துணை காவல் கண்காணிப்பாளர் பொன்.ரகு, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன், மற்றும் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் கீழ்கண்டவாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் – யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைபிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்! மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்! என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்