திருநெல்வேலி: (07.09.2024) -ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்.இ.கா.ப., தலைமையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும், விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தில் அரசியல் மற்றும் ஜாதியை குறிக்கும் வகையில் எந்தவித பிளக்ஸ் போர்டுகளும் அமைக்க கூடாது, விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும், ஊர்வலத்தின் போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது உட்பட பல கட்டுப்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்தாய்வு கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா, நாங்குநேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார், இ.கா.ப., வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ், பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், மற்றும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சண்முகநாதன்