தலைக்கவசம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருக்கும் கட்டாயம் என்ற விதி பல ஆண்டுகளாக இருந்தாலும், பின்னப்பற்றுபவர்கள் குறைவாக உள்ளனர். சமீப காலங்களில் சென்னை நகரத்தில் அதிகரித்துவரும் இருசக்கரவாகன ஓட்டிகளின் இறப்புகளை கருத்தில் கொண்டு, தலைக்கவசம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருக்கும் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த சாலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
”தலைக்கவசம் அணிவது ஒவ்வொருவரின் கடமை என்பதை வாகன ஓட்டிகள் உணர வேண்டும். இந்தியாவில் அதிகளவில் சாலைவிபத்துகள் பதிவாகும் மாநிலங்களின் வரிசையில், தமிழகம் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. தினமும் இறப்புகள் பதிவாகின்றன என்பது நமக்கு கவலை தருகிறது. தலைக்கவசம் அணிவது இறப்பில் இருந்து தப்புவதற்கு பெரிய வாய்ப்பு,” என்கின்ற செய்தியை போலீஸ் நியூஸ் பிளஸ் வாயிலாக நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா திரு.வி.கா. நகர் தொகுதி தலைவரும், சாலமோன் நினைவு அறக்கட்டளையின் நிறுவனருமான திரு. டேவிட் செல்லதுரை அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றார். இரவு, பகல் பாராமல் பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவது இவரது தனி சிறப்பு.
சென்னை பெசன்ட் நகர் எல்லியாட்ஸ் கடற்கரை சாலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம்(16.04.2023) நடைபெற்றது. பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து போலீஸ் நியூஸ் பிளஸ்,சாலமோன் நினைவு அறக்கட்டளை மற்றும் 5K CAR CARE நிறுவனம் நடத்திய இந்நிகழ்ச்சியில் வியாசர்பாடி டான்பாஸ்கோ மாணவ, மாணவியர் மற்றும் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர்.
மேலும், ஹெல்மட் அணியாமல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ( போக்குவரத்து – தெற்கு) திரு. சக்திவேல் மற்றும் 5K CAR CARE நிறுவனர் மற்றும் சிஇஓ திரு.கார்த்திக் குமார் சின்னராஜ் ஆகியோர் ஹெல்மட் வழங்கி அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியினை நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின்னிதழின் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா திரு.வி.கா. நகர் தொகுதி தலைவரும், சாலமோன் நினைவு அறக்கட்டளையின் நிறுவனருமான திரு.டேவிட் செல்லதுரை, அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ( போக்குவரத்து – தெற்கு) திரு. சக்திவேல், அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி கவுரவித்தார்.
5K CAR CARE நிறுவனர் மற்றும் திரு.சிஇஓ கார்த்திக் குமார் சின்னராஜ் அவர்களுக்கு அறக்கட்டளையின் பொருளாளர் ரூபன் நினைவுப்பரிசினை வழங்கினார்.5K CAR CARE நிறுவனர் மற்றும் சிஇஓ திரு.கார்த்திக் குமார் சின்னராஜ் அவர்கள் பல்வேறு சமூக நலத்திட்ட பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார். அநேக மக்கள் இவரால் பலன் அடைந்து வருகின்றனர். தாயுள்ளம் கொண்டு பொதுமக்களுக்கு பணியாற்றி வருகின்றார். தன்னுடைய கார் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான சேவை அளித்து வருகின்றார்.
சாலமோன் நினைவு அறக்கட்டளையின் இணைச் செயலாளர் திரு.தியாகராஜன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் பவுலின், ஸ்டீபன், தியாகராஜன், ரூபன், பிரியதர்ஷினி, கிறிஸ்டோபர், சாரா, தண்டையார்பேட்டை பாபு, வில்லிவாக்கம் பாபு, ரசாக் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மிக அருமையாக ஸ்ரீவித்யா தொகுத்து வழங்கினார்.