திருநெல்வேலி: QR code, Links, Mobil Apps மூலம் பயன்படுத்தி இணையதளத்தில் நிதி மோசடி நடைபெறுகிறது. இந்த மோசடி செய்பவர்கள் இணையதளம் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய UPI யை பயன்படுத்தி போலியான account மூலம் QR Code, Link யை அனுப்பி பணத்தை பெற்றுக்கொண்டு பொருளை அனுப்பாமல் ஏமாற்றுகின்றனர்.
மோசடி நடைபெறாமல் தடுக்க :
இத்தகைய மோசடி நடைபெறாமல் இருக்க பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே QR code களை பயன்படுத்த வேண்டும்.
சந்தேகத்துக்கிடமான QR code அல்லது Link நகல்களை நீங்கள் பெற்றால் மோசமானது என கருதினால் அவைகளை தங்கள் மொபைலில் இருந்து நீக்கிவிடுங்கள்.
ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கவும்.
மேலும் 155260 என்ற இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.