கன்னியாகுமரி: கன்னியாகுமரி பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், சந்தைகள் மற்றும் பூங்கா பகுதிகளில் நிமிர் குழுவினர் POCSO சட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். இந்த பிரசாரத்தின் போது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க POCSO சட்டத்தின் கடுமையான தண்டனைகள் குறித்து விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டு, சட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தகவல்கள் இருப்பின் உடனடியாக காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அதேபோல், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர் மற்றும் விவரங்கள் சட்டத்தின் கீழ் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் நிமிர் குழுவினர் உறுதியளித்தனர். POCSO குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இலக்கை நிறைவேற்ற நிமிர் குழு முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
















