சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணி மண்டபத்தில்
காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி நிறுவனங்களான, ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி, ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரி , ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழிநுட்பக் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராஜ ராஜன் CBSE பள்ளியின் இளைஞர் செஞ்சுலுவை சங்கம் (YRC) மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) மாணவர்கள் சார்பாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கண்ணதாசன் மணிமண்டபத்தில் தொடங்கி கம்பன் மணிமண்டபம் வரை நடைபெற்றது .
இவ்விழிப்புணர்வு பேரணியை அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் S. சுப்பையா அவர்கள், காரைக்குடி வட்டாட்சியர் A. ராஜா அவர்கள், காரைக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் T.பார்த்திபன் அவர்கள், காரைக்குடி கோட்ட ஆயத்தீர்வை அலுவலர் S. மூர்த்தி அவர்கள், காவல் ஆய்வாளர் D.செல்வகுமார், காவல் ஆய்வாளர் A.சதீஸ்குமார், அனைத்து மகளிர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மாலா மற்றும் காரைக்குடி லயன்ஸ் சங்க மண்டலத்தலைவர் MJF. லயன்.R. சித்தார்த்தன் போன்றோர்கள் கொடி அசைத்து கண்ணதாசன் மணிமண்டபத்தில் இருந்து துவக்கி வைத்தனர்.
பேரணியில் பயிற்சி ஆசிரியர்கள் , பொறியியல் மாணவர்கள் மற்றும் CBSE பள்ளி மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியும் துவங்கிய பேரணியானது காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணதாசன் மணி மண்டபத்திலிருந்து தொடக்கி பெரியார் சிலை வழியாக கம்பன் மணி மண்டபத்தைச் சென்றடைந்தது . மேலும் மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு இயக்க மேலாண்மை அலகு வழங்கிய போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு, DRUG FREE TN என்ற அலைபேசி செயலியை (Mobile App) பதிவிரக்கம் செய்யுங்கள் என்ற விவரங்கள்அடங்கிய துண்டுப்பிரசுரங்களை கடைவீதியில் உள்ள வணிகர்களிடமும், பொதுமக்களிடமும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இப்போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியில் ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் R. சிவகுமார், ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழிநுப்பக் கல்லூரியின் முதல்வர் M. சிவகுமார், ஸ்ரீ ராஜ ராஜன் CBSE பள்ளி முதல்வர் R. வெங்கடரமணன், ஸ்ரீ ராஜ ராஜன் CBSE பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் M.வடிவாம்பாள், பேரணி ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் R. செல்வகணேசன், மற்றும் முனைவர் ராஜேஸ்வரி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 500 பேர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் ஏகோஜி ராவ் செய்திருந்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி