சமூக வலைதளத்தில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ஆகாஷ், சிறுமிக்கு போன் செய்து, உன்னுடைய ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் தனது செல்போனில் வைத்துள்ளதாகவும், என்னுடன் வெளியில் வந்தால் விட்டுவிடுவேன் என்றும், இல்லையேல் இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில், மேற்படி சிறுமியை ஒரு தங்கும் விடுதிக்கு, அழைத்துச் சென்று பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி ஆகாஷ் (23), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.