கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது நாகொண்டபள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் மற்றும் மத்திகிரி பேருந்து நிலையம் அருகில் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தபோது வாகனத்தின் ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்கள். மேற்கண்ட நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களை சோதனை செய்துபோது சுமார் 8 யூனிட் M-Sand மற்றும் 8 யூனிட் ஜல்லி கற்கள் இருந்தது. அனுமதியின்றி M-Sand, ஜல்லி கற்கள் ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து மத்திகிரி காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.