திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில், காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, அம்பலவானபுரத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (27). என்பவர் வந்த மினி டிப்பர் லாரியை சோதனை செய்ததில், 2 யூனிட் (M. SAND) மண்ணை எந்தவித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக அள்ளிக் கொண்டு வந்தது தெரிய வந்தது. இது குறித்து, வழக்கு பதிந்து அவரை கைது செய்து கடத்திய 2 யூனிட் (M. SAND) மண் மற்றும் டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















