கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளி முதன்மை மருத்துவ அலுவலர் நாராயணசாமி என்பவர் கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குனரின் உத்தரவின் பேரில் போலி மருத்துவர் ஒழிப்பு சம்பந்தமாக கண்காணித்து வந்ததில் தாசம்பட்டி கிராமத்தில் கூட்ரோட்டில் உள்ள சுகுமார் மெடிக்கல் கடையில் Health Care Centre என்ற பெயரில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் குற்றவாளி மருத்துவம் பார்த்து சிகிச்சையளித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தணிக்கை குழுவுடன் அங்கு சென்று எதிரியின் கடையை தணிக்கை செய்த போது குற்றவாளி தன் மெடிக்கல் கடையின் உள்ளே இரண்டு படுக்கை வசதிகள் உள்ள ஒரு அறையில் ஒரு நோயாளிக்கு ஊசி போட்டு குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டியிருந்தார்.
மெடிக்கலில் இருந்த நாற்காலியில் இரண்டு நபர்கள் உட்கார்ந்து இருந்ததாகவும் அவர்களை விசாரித்ததில் அவர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக வந்திருப்பதாக தெரிவித்து சென்று விட்டார்கள் எனவும் குற்றவாளி D – Pharm படித்துவிட்டு நோயாளிக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்ததாகவும் அங்கிருந்த மருந்துகளை கைப்பற்றி மெடிக்கல் கடையுடன் இணைந்து Health Care Centre க்கு சீல் வைத்து விட்டு மேற்படி முதன்மை மருத்துவர் அவர்கள் குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.