திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஜனவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை பாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் 9 பெண் ஊழியர்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகன் கடந்த 2021 டிசம்பர் 20ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜான் வர்கீஸ் உத்தரவின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் மீது 153, 153A, 124 A, 505 (1),ED 3, பேரிடர் மேலாண்மை பிரிவு 53 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் கிளை சிறையில் இருந்து தற்போது புழல் மத்திய சிறைக்கு மாற்றி அடைக்கப்பட்டார்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை