திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரத்தை சேர்ந்த சகாய ஜோசப் கிளிண்டன் என்பவர் 13.04.2021 அன்று ஆன்லைனில் freefire Game விளையாடிக் கொண்டிருக்கும் போது ஆன்லைன் மூலம் அடையாளம் தெரியாத நபர் ஜோசப் கிளிண்டனிடம் தொடர்பு கொண்டு Online free fire Game – ID தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அதற்கு பணம் 22,000 செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
பின்னர் ஜோசப் கிளிண்டன் Google Pay மூலம் அவருக்கு பணத்தை செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார்.
மேற்படி ஜோசப் கிளிண்டன் பலமுறை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் எவ்வித பதிலும் அளிக்காததால் தன்னை ஏமாற்றியதை அறிந்ததும் பணத்தை பெற்று தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS. அவர்களிடம் மனு அளித்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணன் (சைபர் கிரைம் பொறுப்பு) அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.ராஜ்,உதவி ஆய்வாளர் திரு.ராஜரத்தினம் அவர்கள் தலைமையிலான போலீசார் குற்றவாளியின் வங்கி விவரங்களைக் கண்டறிந்து,Gooplpay எண்ணை வைத்து பணத்தை வாங்கி ஏமாற்றியவர் சென்னை, சித்தலபாக்கத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் 24. என்பதை கண்டறிந்து அவரை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும் குற்றவாளியிடமிருந்து ATM கார்டு,Bank Passbook, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேற்படி வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மேலும் இதுபோல் online Game-ம் மூலம் முகம் தெரியாத நபரிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் எனவும் தெரிவித்தார்.