சென்னை : சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. தாயாளன் உடன் இருந்து காவல் நிலைய பதிவேடுகளை காண்பித்தார். குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டி.ஜி..பி ஆய்வு செய்தார். அதன் பின்னர் காவல் நிலைய அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்பாக பணிபுரிந்த காவலர்களை பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கினார். பொதுமக்களிடம் கனிவோடும்? அன்போடும் நடந்து அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலைய அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்து காவலர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து காவல் நிலையத்தின் உள்ளே இருக்கும் சிறையை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார். ஐ.சி.எப் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. தாயாளன் அவர்கள், அப்பகுதி மக்களிடம் இன்முகத்துடன் வரவேற்று, புகார்களை விரைந்து நடவடிக்கை எடுக்கும் திறன்படைத்தவர். அப்பகுதி மக்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். காவல் உதவி ஆய்வாளர் திரு. தாயாளன் அவர்கள் மக்களின் மனம் கவர்ந்த காவலராக திகழ்ந்து வருகின்றார். டி.ஜி.பி,யுடன் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு. தாயாளன் அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.