சென்னை : சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் நாடு முழுவதும் பணியின்போது வீர மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்வில் காவல் துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.சைலேந்திரபாபு, அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அக்டோபர் 21 ஆம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீனர் ராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில், பத்து மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தமிழ்நாட்டிலும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் பணியின்போது வீர மரணம் அடைந்த தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. எஸ் பூமிநாதன், திரு.எம் சந்திரசேகரன், மற்றும் முதல் நிலை காவலர் திரு. தேவராஜன், உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் 2064 நபர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர் இன்று (21/10/2022), கடந்த ஓராண்டில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் முனிவர் திரு சைலேந்திரபாபு அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி மறைந்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.
அதனை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலம் முன்னாள் ஆளுநர் திரு.எம். கே. நாராயணன் ரியர் அட்மிரல் திரு. எஸ். வெங்கட்ராமன், காவல்துறை தலைமை இயக்குனர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குனர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். அமிர்தா ஜோதி, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கடந்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் களப்பணி ஆற்றும்போது வீர மரணம் அடைந்த துணை ராணுவப்படையினர், மற்றும் காவல்துறையினருக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் வீர மரணம் அடைந்த 264 நபர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 144 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. களப்பணி ஆற்றும்போது வீரமரணம் அடைந்த காவல்துறையினர் விட்டு சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி ஏற்று அவர்களின் வீர தியாகம் வீண் போகாது என்று காவலர் வீரவணக்க நாளாக இன்று உறுதிமொழி ஏற்போம்.