கடலூர்: காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள SBI ATM -ல் பணம் எடுக்க காட்டுமன்னார்கோவில் குருங்குடி புளியடி தெரு குமார் மகன் சிற்றரசு என்பவர், ரூபாய் 10,000 பணம் எடுத்தபோது மேற்படி மிஷினில் பணம் வர தாமதம் ஆனதால் வீட்டிற்கு வந்துவிட்டார். அந்த நேரத்தில் காட்டுமன்னார்கோயில், குப்புபிள்ளைசாவடி வடக்கு தெருவை சேர்ந்த செல்வகணபதி மனைவி தனலட்சுமி என்பவர் அதே ATM -ல் பணம் எடுக்கச் சென்றபோது ATM மிஷினில் ரூபாய் 10000 இருந்ததை எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் விசாரணை மேற்கொண்டு ATM ல் பணத்தை எடுக்காமல் சென்ற சிற்றரசு என தெரிந்து சிற்றரசின் தாயார் பூங்கோதை அவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி தனலட்சுமியின் நேர்மையை பாராட்டி உதவி ஆய்வாளர் திரு. A. சையத்அப்சல் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
















