அரியலூர்: ATM இயந்திரத்தில் பணம் எடுத்த பின்னர் தவறுதலாக வெளியேறிய பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த நபரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் பாராட்டினார். நேர்மையும் சமூக பொறுப்புணர்வும் கொண்ட செயலாக கருதப்பட்ட இந்த நிகழ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெரிதும் பாராட்டி, இத்தகைய செயல்கள் பொதுமக்களிடையே நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் என தெரிவித்தார். மேலும், நேர்மையான குடிமக்களின் இவ்வகை முன்மாதிரியான செயல்கள் சமூகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பேணுவதற்கு துணைபுரியும் என்றும் அவர் கூறினார்.















