அரியலூர்: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜி.கே.எம். நகரில் குடியிருப்பவர் ஜாவித் பீவி. இவரது கணவர் பக்ரீத் முகமது. இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, வெங்கனூரில் உள்ள தங்களது வயலில் சாகுபடி பணிக்காக சென்றுள்ளனர். பின்னர் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து ஜாவித் பீவிக்கு தகவல் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து திருமானூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.