திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முத்தழகுபட்டியைச் சேர்ந்த செபஸ்தியார் என்பவரை மர்ம கும்பல் கொலை செய்த வழக்கில் நகர் தெற்கு காவல்துறையினர் 10 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.இளஞ்செழியன் அவர்கள் நீதிமன்ற முதல்நிலைக் காவலர் திருமதி.பாப்பாத்தியம்மாள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.சூசை ராபர்ட் அவர்களின் சீரிய முயற்சியால் (15.11.2022)-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிகள் அந்தோணி விமல் ராஜ் (33), சின்னப்பன் ராஜ் (37) அருள் ஆரோக்கியதாஸ் (எ) ஆவுக் குட்டி (40) தங்கம் (எ) மதலை முத்து (62),ஜஸ்டின் தாஸ் (எ) ஜஸ்டின் (28) ஜான்சன் பிரபாகரன் (30) தாமரைக்கண்ணன் (எ) கண்ணன் (29) இக்னேஷ் இன்பராஜ் (39) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் தலா ரூ.10,000/- அபராதமும் அளித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா