கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் 79- வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.C.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார், உடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை, அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர். ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.V.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் காவல் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.