திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ .சி மைதானத்தில் இன்று (15-08-2025) தேதி சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., காவல் துணை ஆணையர்கள் V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) S.விஜயகுமார்,(தலைமையிடம்) காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., தேசியக் கொடியை ஏற்றி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர், சதீஸ் கண்ணன், (பயிற்சி) வழிநடத்தி வந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். திருநெல்வேலி மாநகர காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்த 53 காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்