விருதுநகர்: 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (25.01.2026) நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.ஓ. சுகபுத்ரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தெ. கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். அணிவகுப்பில் காவலர்களின் ஒழுக்கம், ஒருங்கிணைப்பு, அணிவகுப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
ஒத்திகையின் போது, குடியரசு தின விழா சிறப்பாகவும், மரியாதைக்குரிய முறையிலும் நடைபெற வேண்டும் என அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், விழா நாளில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவல் துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.
















