திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்ற ராசு 62 என்பவரை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த வழக்கில் சேரன்மகாதேவி, சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மாரி ராஜ் என்ற ராசு குட்டி 23 கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டதால் தருவை, சாஸ்தா கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் முத்து 22 என்பவரை கைது செய்து அடைத்தனர். மேலும், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கைது செய்தும் கடைகள் மீது அபராதம் விதித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பணகுடி பகுதியில் 162 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் வாகனத்தில் கொண்டு வந்த தூத்துக்குடி மாவட்டம், முதலூர், கண்டாச்சிபுரம், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வேதமுத்து41 பணகுடி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்கண்ட 3 குற்றவாளிகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.ப.சரவணன், இ.கா.ப., அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் திரு.சுபாஷ் ராஜன், சுத்தமல்லி காவல் ஆய்வாளர் திரு. ஜீன்குமார் (பொறுப்பு), பணகுடி காவல் ஆய்வாளர் திரு.அஜிகுமார் ஆகியோர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.