தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு மனைவியும், 7 வயது மகளும் உள்ளனர். இவரது மனைவி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார்.
இவர்களது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமியின் தந்தை காலை நேரத்தில் வேலைக்காக வெளியே சென்று விடுவார்.
இதனால் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்து வந்தாள். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பச்சியப்பன் 74. என்ற கூலித்தொழிலாளி சிறுமியிடம் பச்சியப்பன் நைசாக பேச்சு கொடுத்து
சாக்லேட் தின்பண்டங்களை கொடுத்து கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது முதியவர் பச்சியப்பன் அத்துமீறி நடந்து கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனிடம் பச்சியப்பன், நைசாக பேசி வீட்டுக்கு முன்பு காவலுக்கு வைத்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், முதியவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து வருவதை பற்றி அறிந்தான். இதனால் அந்த சிறுவனும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தான்.
சிறுமியின் உடல்நிலை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு சிறுநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் பற்றி தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் சிறுமியை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 74 வயது முதியவர் மற்றும் 13 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தற்போது தலைமறைவாக இருந்து வரும் முதியவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 10 வயது சிறுவன், சிறுமியை கற்பழித்த 13 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.