ர்மபுரி வழியாக ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் சூப்பிரண்டு திரு.பாலாஜி இது தொடர்பாக தீவிர வாகன சோதனை மேற்கொள்ள போலீசாருக்குஉத்தரவிட்டார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு திரு.விஜயகுமார் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.மோகன் திரு.ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கன்டெய்னர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் மூட்டை மூட்டையாக 7 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
போலீசார் லாரி டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை சேர்ந்த சிவக்குமார் 27, வெங்கடாஜலபதி 46. என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கன்டெய்னர் லாரி மற்றும் அதில் இருந்த 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி மற்றும் அரிசியை தர்மபுரி நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.