நாகர்கோவில்: பிரபல நகைக்கடையின் உரிமையாளருக்கும், தொழில் ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வருகிறது. அவருக்கு 48 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்தேன். என்னிடம் வாங்கிய நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை சேர்த்து எனக்கு அந்த நகைக்கடை உரிமையாளர் .7 கோடி ரூபாய் தரவேண்டும்.
ஆனால் அந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகன், மகள் ஆகிய 3 பேரும் சேர்ந்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறப்பட்ட புகாரின் பேரில் நகைக்கடை உரிமையாளர் மற்றும் மகன், மகள் என 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திரு.சிதம்பர தாணு வழக்கு பதிவு செய்து.
தேடி வந்த நிலையில், நகைக்கடை உரிமயைாளரின் மகன் அரவிந்த் ஆசீரை 42 நேற்று மாவட்ட குற்றப்பிாிவு போலீசார் களியங்காடு ஜங்ஷனில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகளை போலீசார் தேடி வருகின்றனர்.