திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அசோக் நகரை சேர்ந்தவர் ராஜவள்ளி 32. கடந்த 2013-ம் ஆண்டு ராஜவள்ளி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ராஜவள்ளி அணிந்திருந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றனர். நத்தம் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேர்வீடு பகுதியை சேர்ந்த வீராசாமி 45. பெரிய மலையூரை சேர்ந்த சங்கர் 40. ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது திண்டுக்கல் சப்-கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றவாளிகள் வீராசாமி, சங்கர் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி திருமதி.மீனாசந்திரன் உத்தரவிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
















