தேனி : தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காயத்ரி என்பவரது வீட்டில் இருந்த 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.யாழிசை செல்வன் அவர்கள் தலைமையில் தலைமை காவலர் திரு.சம்சுதீன், தலைமை காவலர் திரு.செல்வம், தலைமை காவலர் திரு.செல்லதுறை, தலைமை காவலர்திரு.வடிவேல், காவலர் திரு.விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, திருட்டில் தொடர்புடைய இரண்டு இளஞ்சிறார் உட்பட ஒருவரை பிடித்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.