திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே செந்துறை அடுத்துள்ள ரெங்கய சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பெரியம்மாள்(65), இவர் அதேபகுதியில் உள்ள கருவேலங்காட்டில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரியம்மாள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சரவணக்குமார்(19), என்ற வாலிபர் கடந்த மாதம் 11-ந்தேதி மணப்பாறை பகுதியில் உள்ள கோவில் விழாவிற்கு சென்று நன்கு மதுகுடித்துவிட்டு கிடா விருந்தில் கலந்து கொண்ட திரும்ப சொந்த ஊருக்கு வந்தபோது அருகில் தூங்கி கொண்டிருந்த பெரியம்மாளை கற்பழிக்க முயன்றார். அவர் சத்தம் போடவே வலுக்கட்டாயமாக தனது ஆசையை நிறைவேற்றினார். அதன்பிறகு அவர் வெளியில் கூறிவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்ததாகவும் பின்னர் அவர் அணிந்திருந்த மூக்குத்தியை திருடிவிட்டு எனது வீட்டிற்கு சென்று விட்டதாகவும் போலீசில் சரவணகுமார் வாக்குமூலம் அளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா