தேனி: தேனிமாவட்டத்தில், கள்ளதனமாக மதுபாட்டில்கள் பதுக்கியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.சுதந்திர தினத்தன்று, மாவட்டம் முழுவதும், டாஸ்மாக் மதுபானகடைகள் அடைப்பதற்கு, உத்தரவிடப்பட்டது.
ஆனால் அதனையும், மீறி கள்ளதனமாக மதுபாட்டில்கள், விற்கப்படுவதாக கிடைத்த தகவல் அடுத்து, தேனி, உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிபட்டி, உள்ளிட்ட சப்-டிவிசன்களில் உள்ள காவல் நிலையங்களில் 610 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விற்பனை செய்த 15 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடை அடைப்பிற்கு முதல்நாளில், மொத்தமாக சரக்குகள் வாங்குவோர் மீதும் இதற்குதுணைபோவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது..