கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு. M. அருண்குமார் இவர் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்து தற்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிவிரைவு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி கடலூர் ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். தனது சொந்த கிராமம் கொங்கராயனூர் பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாததை கண்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தனது சொந்த பணம் ரூபாய் 60 ஆயிரம் செலவில் ஐமாஸ் லைட் அமைத்து அக்கிராமத்திற்கே வெளிச்சம் அளித்துள்ளார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஐமாஸ் லைட் அமைத்த காவலர் அருண்குமார், அவரது மனைவி காயத்ரி ஆகியோர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பொன்னாடை அணித்து பாராட்டினார்.
















