குமரி: நாகர்கோவில் கலை நகர் அம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்.இவரது மகன் ஹீசரவணன் வயது 32) இவரும் அதே பகுதியை சேர்ந்த சுஜி (32) இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் ஹீவேல்(11)என்ற மகனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹீதா(10) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேலை யில இருந்து வீட்டிற்கு வந்த ஹீசரவணன் மீண்டும் போலீஸ் வேலையில் சேராமல் கிடைக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.தற்போது கடந்த 10 நாட்களாக ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் கொரோனா வார்டில் நோயாளிகளின் உறவினரின் அனுமதியுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
ஹீசரவணனின் வீட்டின் அருகில் ராஜாக்கமங்கலம் பூவன்குடியிருப்பை சேர்ந்த ரஞ்சித் (34) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் கிருஷ்னன்கோயில் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்துள்ளனர்.
அந்த வீட்டில் உள்ள கர்ப்பிணி பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சித் வீட்டிற்குள் சென்றுள்ளார்.இதனை கண்டித்த ஹீசரவணன், ரஞ்சித்தை அடித்துள்ளார்.இதுதொடர்பாக கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் சமாதானபடுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை கடைக்கு சென்று விட்டு திரும்பிய ஹீசரவணனை, ரஞ்சித் அரிவாளால் வெட்டியுள்ளார்.இதில் காயமடைந்த ஹீசரவணன் காயத்தோடு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கட்டுபோட்டுவிட்டு அவரது நண்பரான பட்டகசாலியன்விளையை சேர்ந்த விக்ரம் என்பவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அங்கு மறைந்து இருந்த ரஞ்சித் திடீரென வந்து ஹீசரவணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.அப்போது தடுக்கவந்த விக்ரமிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் படுகாயமடைந்த ஹீசரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.அரிவாள் வெட்டில் காயமடைந்த விக்ரம் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டாறு போலீசார் படுகாலை செய்யப்பட்ட ஹீசரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி ரஞ்சித்தை 6 மணி நேரத்தில் கைது செய்தனர்.