திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதுகுறித்து வடக்கு காவல் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன்,அவர்கள், உத்தரவின் பேரில் நகர் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் மனோகரன் , நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், மற்றும் காவலர்கள் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சி.சிடி.வி பதிவுகளை ஆய்வு செய்து மேற்கண்ட இருசக்கர வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் பெரிய பொன்னுமாந்துரை பகுதியை சேர்ந்த என்பவர் M.அரவிந்த் குமார் (23). S/O முருகன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா