திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம்,பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் படி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முத்தையா, அவர்களின் தலைமையில், காவல் நிலை போலீசார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பட்டிவீரன்பட்டி அண்ணா நகரில் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திர பிரசாத் (23), என்பவர் நடத்தி வந்த பெட்டிக்கடையை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போது கடையில் சுமார் 5405 லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மகேந்திரா பிரசாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 5,405 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.18,220/- பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா