திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் நத்தம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காந்திநகரில் இருந்து அய்யாபட்டி செல்லும் வழியில் உள்ள குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பதுக்கி வைத்திருப்பதை கண்ட தனிப்படையினர் தனிப்படையினர் சுற்றி வளைத்து குட்கா பொருள்களை கடத்தி வந்த 3 பேரை கைது செய்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா, மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா