குமரி: குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரிலிருந்து தோவாளை செல்லும் சாலையில் உள்ள அரசு டாஸ்மார்க் கடை அருகில் இறச்சகுளம் அம்பலம் திருத்தி காலனி பகுதியை சார்ந்த சிவன் என்பவர் மகன் தேவா என்ற தேவா ஆனந்த் 24 மற்றும் அவரின் சகோதரர் வாசுதேவன், விஷ்ணுபுரம் காலனியை சேர்ந்த ரெஜின்,திடல் பகுதியை சார்ந்த கனகராஜ் ஆகியோர் செண்பகராமன்புதூர் இலந்தைநகர் பகுதியை சார்ந்த இவர்களது நண்பர் முருகேஷ் என்பவருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்.
இவர்கள் மது அருந்திய இடத்தின் அருகே செண்பகராமன்புதூர் இலந்தைநகர் பகுதியை சார்ந்த சுபி என்பவர் மகன் ராஜா 34 தமிழ்மரை என்பவர் மகன் பாபு, மரியதாஸ் என்பவர் மகன் மதன்பாபு 20 காளியப்பன் என்பவர் மகன் இசக்கியப்பன் 37 சுந்தரம் என்பவர் மகன் அப்பு 34 தாமோதரன் என்பவர் மகன் பார்த்திபன் 23 சுரேந்திரன் என்பவர் மகன் சுமன் 19 ஆகியோரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது இரு தரப்பினர் இடையே திடீர் என்று சிறிய வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினர்களும் மாறி மாறி அடித்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அருவா மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு மாறிமாறி தாக்கத் தொடங்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போன்று காட்சியளித்தது. மேலும் கலவாத்தில் ஈடுபட்ட சிலர் வெட்டு காயத்தில் ரத்தம் சொட்ட ஓடினர்.
இதனிடையே ஆரல்வாய்மொழி காவல்நிலையத்திற்கு தகவல் வரவும் அங்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் திரு. மாரிச்செல்வம் மற்றும் போலீசார் கலவரத்தில் ஈடுபட்ட சிலரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதில் தேவ்ஆனந்த், வாசுதேவன், ராஜா, மதன்பாபு, மற்றும் பாபு ஆகியோர் வெட்டுக் காயமும் மற்றும் கத்திக்குத்து ஏற்பட்டதால் அவர்கள் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தேவ் ஆனந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராஜா, பாபு, மதன்பாபு,இசக்கியப்பன், அப்பு, பார்த்திபன், சுமன், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது மேலும் ராஜா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவ் ஆனந்த் அவரது தம்பி வாசுதேவன், அவரது நண்பன் முருகேஷ், ரெஜின், கனகராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரம் நடந்து சில நேரங்களில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மாரிச்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பை சேர்ந்த 5 நபர்களையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தது அப்பகுதியை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.