குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரசி இடைத்தரகர்கள் மூலம் கள்ளசந்தையில் வாங்கி கேரளாவுக்கு சாலை மற்றும் கடல்மார்க்கமாக கடத்தப்பட்டு அங்கு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்கு உணவு கடத்தல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துணை கண்காணிப்பாளர்.திரு. இளங்கோ உத்தரவின்படி கன்னியாகுமரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் திரு. விஜி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. இசக்கி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்திரு.கணேசன் ஆகியோர் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த 12ஆம் தேதி கன்னியாகுமரி பகுதிகளில் சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரோக்கியபுரம் பகுதியை சார்ந்த வனஜா கஸ்மீர் என்பவர் ஒரு வீட்டில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி இருப்பது தெரியவந்ததும் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் 13ஆம் தேதி காலை 6 மணிக்கு அழகியமண்டபம் சந்திப்பில் கேரளா நோக்கி சென்ற ஒரு சொகுசுக் காரை தடுத்து சோதனை செய்தபோது அந்த காரில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை கோழிவிளை பகுதியை சேர்ந்த முகமதுசபி என்பவர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குளச்சல் குறும்பனை அருகே அதிவேகமாக சென்ற ஒரு சொகுசுக் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் சுமார் 1485 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது அப்போது அதிலிருந்த ராமநாதன் மற்றும் ஜஸ்டின் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் கடந்த 16ஆம் தேதி கீழபள்ளம் பகுதியில் அன்னைநகர் பகுதியை சார்ந்த இருதயராணி என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சென்று சோதனை செய்தபோது சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்
இதனடிப்படையில் இந்த மாதம் மட்டும் ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்ததுடன் கடத்தயில் சம்மந்தப்பட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரே மாதத்தில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பிடிபட்டது.