திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.இளவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.ஜெயக்குமார், சுப்பிரமணி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பாடலிபுத்திரா ரெயிலில் கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்தது. ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர். அதில் 5 கிலோ கஞ்சா பை இருந்தது தெரிய வந்தது கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.