திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஜனகன் தலைமையிலான காவல்துறையினர் (24.01.2026) அன்று ரோந்து பணியில் இருந்த போது, சத்யா நகா் விலக்கு பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், சீதற்பநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகாராஜா(36). என்பதும், விற்பனைக்காக 4 கிலோ கஞ்சாவை கொண்டுசென்றதும் தெரிய வந்தது.
இதே போல் பேட்டை பகுதியில், காவல் உதவி ஆய்வாளர், அருள்செல்வன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து சென்றபோது, ஒரு சிறுவன் மற்றும் திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் இசக்கிமுத்து என்ற கருப்பா(28). என்பவரை சோதனை செய்த பொழுது அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















