தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டகுற்றவாளிகளை கைது செய்து,
அவர்களிடமிருந்து 31 பவுன் நகைகளை பறிமுதல் செய்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம், உதவி ஆய்வாளர் திரு. சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பிராங்க் ஸ்டீபன், தலைமை காவலர் திரு. சுந்தர்ராஜ்,
முதல் நிலை காவலர்கள் திரு. கணேசன், திரு. பாலகுமார், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. கலைவாணர் மற்றும் காவலர் திரு. மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,
கடந்த 14.10.2021 அன்று முறப்பநாடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சாராய வடிப்பதற்காக வைத்திருந்த 50 பேரல்களை கைப்பற்றி அதில் இருந்த 19 லிட்டர் சாராயத்தை அழித்து .
சம்மந்தப்பட்ட 3 எதிரிகளை கைது செய்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. மோகன், முதல் நிலை காவலர் திரு. மாரிமுத்து, தனிப்பிரிவு காவலர் திரு. சேகர் மற்றும் காவலர் திரு. கணேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்திய குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர்
திருமதி. மங்கையற்கரசி, உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், தலைமை காவலர் திரு. கோபாலகிருஷ்ணன், முதல் நிலை காவலர் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் காவலர் திரு. மோகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
♻️கடந்த 12.10.2021 அன்று ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்மந்தப்பட்டகுற்றவாளியை கைது செய்து,
துரிதமாக செயல்பட்டு வழக்கு பதிவு செய்த அன்றே கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்பட்டுத்திய ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், உதவி ஆய்வாளர் திரு. முத்துராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பொன்முனியசாமி, முதல் நிலை காவலர்கள் திரு. கொடிவேல், திரு. பிரபாகரன் மற்றும் காவலர் திரு. விடுதலை பாரதிகண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கன்னியாகுமரி மாவட்டம் காவல் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற வான்செய்தியின்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுபாட்டு அறையிலிருந்த கொடுக்கப்பட்ட வான்செய்தி தகவலின் அடிப்படையில் கடந்த 10.10.2021 அன்று
சவலாப்பேரி சோதனை சாவடியில் வாகன தணிக்ககையின் போது ஒரு காரை சோதனை செய்ததில் அதில் இருந்த ஒரு கட்சியின் நிர்வாகிகளை பிடித்து
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்த புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. தர்மர், மணியாச்சி
முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார், புளியம்பட்டி காவல் நிலைய காவலர்கள் திரு. அந்தோணி பிரகாஷ், திரு. மகேந்திரராசு, திரு. ஜெரோம் ஞானபிரபு, திரு. கோமதி சங்கர் மற்றும் திரு. செண்பகராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
5 காவல் ஆய்வாளர் உட்பட 32 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து அவர்கள் உடனிருந்தார்.