திருநெல்வேலி : தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள், கஞ்சா வேட்டை 3.0-வினை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.பல்பீர்சிங், இ.கா.ப, அவர்கள் தலைமையிலான, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர், அவர்கள் மற்றும் அம்பாசமுத்திரம் உட்கோட்ட தனிப்படை போலீசார் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், (18.11.2022)-ம் தேதி இன்று வாகன தணிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், மினி லாரியில் சுமார் 21 கிலோ எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து எடுத்துவந்தது தெரியவந்துள்ளது.
மேற்படி கஞ்சாவை கடத்தி வந்த மானூர், மருதப்பபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து 34. சுத்தமல்லியை சேர்ந்தமுத்துராமன் 38. என்பவரை போலீசார் கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து, டவுணை சேர்ந்த சிவா மற்றும் மடத்தான் ஆகிய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.