தூத்துக்குடி: திருச்செந்தூர் பகுதியில் தடை செய்யப்பட்டு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஏ.எஸ்.பி.ஹர்ஷ்சிங் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மேற்பார்வையில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையிலான போலீசார் பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை பஸ் ஸ்டாப் அருகில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது உணவு பொருட்கள் கொண்டு செல்வதாக கூறப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர்.
அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த முதலூர் கடாச்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வேதமுத்து(39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலியை சேர்ந்த முருகன் என்பவரிடம் மொத்தமாக விலை வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்
. இதில் கணேஷ் 1200, கூல் லிப் 400, விமல் 300, ஏஓன் டோபாக்கோ 200 என மொத்தம் 451 கிலோ தடை செய்யப்பட்ட; புகையிலை மற்றும் டாடா ஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.