மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் இன்று சோதனை மேற்கொண்டபோது 68 ஆயிரத்து 760 லிட்டர் கொள்ளளவு கொண்ட 430 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அருண்குமார் (33), ஆண்டாள்புரத்தை சேர்ந்த சந்திரசேகரன் (33) ஆகிய இருவர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மாநகர மதுவிலக்கு காவல்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஊரடங்கு காலத்தில் ரயில் மூலம் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 732 மது பாட்டில்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளளவு 215.550 லிட்டர் ஆகும். இந்த சட்டவிரோத கடத்தல் தொடர்பாக இதுவரை 20 நபர்கள் மீது மதுரை ரயில்வே போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள் சந்தேகப்படும் யாரேனும் இருந்தால் அவர்களது உடமைகளை சோதனை செய்து தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் இருந்தால் இது போன்ற செயல்கள் மேலும் தொடருமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ரயில்வே போலீஸ் அறிவித்துள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி