சென்னை : (08/04/2023) அன்று சென்னை விமான நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கவும் மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சென்னை வருகை தர உள்ளார் அதன் பெயரில்அவர்கள் சென்னை வருகை ஒட்டி தாம்பரம் மாநகர காவல் எல்லையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் அவர்கள், தலைமையில் அனைத்து காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் தகுந்த அறிவுரைகள் வழங்கியுள்ளார் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் தாம்பரம் மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் மூன்று காவல் இணை ஆணையாளர் 13 காவல்துறை ஆணையாளர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு குற்றப்பிரிவு போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் ஆளுநர்கள் ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலாளினர்கள் உட்பட 4000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களுடன் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான பல்லாவரத்தில் உள்ள GE T&D India Company கிரிக்கெட் மைதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் செல்லும் வழி தடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தங்கும் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், மற்றும் விடுதிகளிலும், சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர் இது தவிர தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய ரயில் நிலையங்கள் பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் பிரதமர் வருகையொட்டி தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆலோசனையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செங்கல்பட்டு அவர் அவர்கள் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க (5/4/2023) முதல் (9/ 4/ 2023), வரை ஆகிய மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்