விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காரியாபட்டி நாசியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக மதுவிலக்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரித்
தாளாளர் உமாபதி தலைமை வகித்தார். காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் சிவனாண்டி முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர் செந்தில்குமார், பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், காரியாபட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சின்னக் கருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மதுவிலக்கு பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசினார். கல்லூரி மாணவ மாணவிகள் 400 இருக்கும் மேற்பட்டோர் மது ஒழிப்பு குறித்த வாசகங்களை ஏந்தி, பேரணியில் பங்கேற்றனர். பேரணியில், காரியாபட்டி போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் கள் அசோக் குமார், சமீமா பேகம், துணை முதல்வர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தமிழ் துறை பேராசிரியர் முனியசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்களும் செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி